இன்று விருதை மறுத்தவர் அன்று தீர்ப்பை திருத்தி எழுதி புரட்சி..
====================================================
மூன்றாம் பகுதி தொடரில் 55 வருடத்துக்கு பிறகு காலதாமதமாக வழங்கிய பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து ஒரு புரட்சியை நிகழ்த்தினார் எஸ்.ஜானகி என்று பார்த்தோம். மத்திய அரசின் விருதை ஏற்க மறுத்துவிட்டாரா? அரசு விருதையே ஏற்காதது ஏன், இது விருதை அவமதிக்கும் செயல் அல்லவா? என்று சிலர் முணுமுணுத்தனர். அவர் ஏன் அந்த விருதை ஏற்க மறுத்தார் என்பது தெரிந்தால் அதில் உள்ள நியாயத்தை உணரமுடியும்.
உள்ளத்தில் கள்ளம் கபடம் இல்லாதவர்கள் எதையும் வெளிப்படையாக செய்வார்கள், பேசுவார்கள். அதைத்தான் எஸ்.ஜானகி பதம்பூஷண் விருதை மறுத்தபோதும் செய் தார், பேசினார்.
பத்மபூஷண் விருதை ஏனோ தானோ என்று ஜானகி மறுத்துவிடவில்லை. அதற்கும் வலுவான ஒரு காரணம் இருந்தது. தேசிய விருது என்றாலே அது வட இந்திய கலைஞர் களுக்குத்தான் கிடைக்கும் என்ற நிலை அந்த காலத்தில் நிலவியது. அப்படியொரு ஒர வஞ்சனையும் அதில் நடந்து வந்தது. தேசிய விருது தென்னிந்தியர்களுக்கு புறக்கணிக்கப் படுவதை அம்பலப்படுத்தவே பத்மபூஷண் விருதினை ஏற்க மறுத்தார் எஸ்.ஜானகி.
1955ம் ஆண்டிலிருந்து 55 வருட மாக சினிமா வில் பாடிக்கொண்டிருக்கிறார் எஸ்,ஜானகி. ஆனால் இந்தி பாடகி லதா மங்கேஷ்கருக்கு 1969ம் ஆண்டே பத்மபூஷண் விருது அறிவிக் கப்பட்டது. அதேபோல் ஆஷா போஷ் லேவுக்கு 2008 ம் ஆண்டு பத்ம விருதுகளியே மிக உயர்ந்த விருதுதான பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டது. ஆனால் ஜானகிக்கு 2016ம் ஆண்டுதான் அதாவது லதா மங்கேஷ்கர், ஆஷா போஷ்லேவுக்கு பத்ம விருதுகள் அளித்த பிறகுதான், அதுவும் ஜானகி பாட வந்து 55 ஆண்டுகளுக்கு பிறகுதான் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதுதான் ஜானகியின் தன்மானத்தை சீண்டியது. ’வட இந்தியர்களுக்குத்தான் மத்திய விருதுகள் அதிகம் வழங்கப்படுகிறது. தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அதை சுட்டிக்காட்டும் விதமாகவே பத்ம்பூஷண் விருதை ஏற்கவில்லை’ என்ற தனது குரலை ஓங்கி ஒலித்தார். அவரது பேச்சில் இருந்த நியாயத்தையும், சுயமரி யாதையையும் எல்லோருமே உணர்ந்தார்கள். மத்திய அரசின் விருதுக் குழுவுக்கும் இந்த குரல் பயங்கர வெடிச் சத்தமாக கேட்டது.
விருதின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலி ருந்தே உணர்ந்தவர் ஜானகி. தனக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் காலதாமதமாக வழங்கிய பதம பூஷண் விருதினை தூக்கி எறிந்த துணிச்சல் இப்போது அல்ல அந்த காலத்திலேயே நியாமற்ற முறையில் வேறு வொருவருக்கு வழங்கப்பட்ட விருதினை சரியான நபருக்கு வழங்க உரிமைகுரல் கொடுத்தார் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது நடந்தது. அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொண் டால் ஆச்சரியப் பட்டு போவீர்கள்.
இந்திய மற்றும் மேற்கத்திய என 16 மொழி களில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இன்றைக்கும் பாடிக்கொண்டிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்ற அதிசயம்தான் அந்த அதிர்ஷ்டசாலி. அப்போது எஸ்.பி.பி சினிமா வில் பாட வரவில்லை. தெலுங்கு அசோசியே ஷன் நடத்திய பாட்டு போட்டியில் இரண்டு வருடமாக தொடர்ந்து முதலிடத்தை பிடித் தார் இளைஞர் பாலசுப்ர மணியம். அடுத்த ஆண்டு அதாவது 3வது ஆண்டு போட்டியிலும் பங்கு கொண்டார். இம்முறை வென்றால் முதல் பரிசுடன் ஒரு வெள்ளிக் கோப்பையும் பரிசாக கிடைக்கும். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் எஸ்.ஜானகி. பாட்டு போட்டி தொடங்கியது. ஒவ்வொருவரின் பாடலையும் உன்னிப்பாக கேட்டுகொண்டி ருந்தார் ஜானகி. போட்டி முடிவில் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எஸ்.பி.பாலசுப்ர மணியம் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இது எஸ்.பி.பிக்கு அதிர்ச்சி அளித்தது. முகம் வாடிய நிலையில் இருந்தார். ஆனால் இன்னும் இரண்டு கண்கள் இந்த அநியாயத் தை கோபத்துடன் எதிர்கொண்டது. அந்த கண்கள் எஸ்.ஜானகியின் கண்கள்.
பாட்டு போட்டியை உன்னிப்பாக பார்த்துக் கொண்டி ருந்த எஸ்.ஜானகி இந்த முடிவை ஏற்க மறுத்தார். இருக்கையிலிருந்து எழுந்தவர், ’இந்த முடிவை என்னால் ஏற்க முடியாது. முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட வரைவிட 2ம் பரிசுக்கு தேர்வானவர் நன்றாக பாடினார்’ என்று உரக்க குரல் கொடுத்து தீர்ப்பை திருத்தி எழுதினார். அது அங்கிருந் தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது தீர்ப்பில் இருந்த நேர்மையை அனைவருமே கைதட்டி வரவேற்றனர். ஜானகியின் முடிவே இறுதியாக ஏற்கப் பட்டது. 2ம் இடம் பெற்ற எஸ்.பி.பி முதலிடத்துக்கு வந்தார். முதல் பரிசும் வெள்ளிக்கோப்பையும் பெற்றார். அன்றைக்கு முதலிடத்துக்கு எஸ்.ஜானகி இவரை முன்னி ருத்தினார். மோதிரக் கை குட்டுப்பட்ட எஸ்பிபி முதலிடத்திலிருந்து விலகாமல் இன்று வரை தனது இடத்தை தக்கவைத்து வருகிறார்.
எங்கும் அதிகம் தலைகட்டாத எஸ்.ஜானகி சினிமாவில் நடித்திருக்கிறார் என்றால் பலரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். அந்த சுவாரஸ்யம் பற்றி காலையில் பார்ப்போமா?
எஸ்.ஜானகி 4ம் பகுதி நிறைவு..
-கண்ணன்