ஒரே நாளில் இரண்டு கட்சிகளை வழிக்கு கொண்டு வந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற இரு கட்சிகளை வலைக்குள் சிக்க வைக்க முடியாமல் தடுமாறி நிற்கிறார்.
வழிக்கு வந்த கட்சிகள் –விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட். இரு கட்சி தலைவர்களையும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய ஸ்டாலின், ஆளுக்கு இரு தொகுதிகளை கொடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை உறுதி.மற்றொன்று தென்காசியாக இருக்கலாம்.
நிபந்தனைகளின் பேரில் சிறுத்தைகளுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்பரம்.இரு தொகுதிகளிலும் அந்த கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது நிபந்தனை.திருமாவளவனும் ஒப்புக்கொண்டார்.
சற்று நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட –தங்களுக்கு ஒரு தொகுதி கூடுதலாக வேண்டும் என்பது அந்த கட்சியின் ஒரே தேர்தல் கொள்கை.இப்போது அல்ல—எப்போதுமே- அதனை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளது- சி.பி.எம்.ஸ்டாலினை நேற்று சந்தித்த போதும் அதையே வலியுறுத்தினர். அதாவது 3 தொகுதிகள் வேண்டும் என்பது சி.பி.எம். நிலைப்பாடு.
3 லோக்சபா தரமுடியாவிட்டால் 2 லோக்சபா + ஒரு ராஜ்ய சபா என்றது சி.பி.எம்.தரப்பு.அவர்கள் வைத்த அடுத்த கோரிக்கை தான் ஸ்டாலினை மயக்கம் அடையச்செய்துள்ளது.
சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில் குறைந்த பட்சம் 2 இடங்கள் வேண்டும் என்று சி.பி.எம் வலியுறுத்த- பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை..
மாலையில் வந்தார் வைகோ. ஸ்டாலினை சந்தித்தார். திருச்சி மற்றும் ஈரோடு தொகுதிகளை தர சம்மதித்தார்- ஸ்டாலின். ஆனால் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பது தி.மு.க.வின் நிபந்தனை.
சகாக்களுடன் பேசி விட்டு சொல்கிறேன் என்று அறிவாலயத்தில் இருந்து திரும்பி வந்து விட்டார்- வைகோ.
வைகோவுடன் இன்று உடன்பாட்டுக்கு வாய்ப்புகள் அதிகம்.. விஜயகாந்த் போல் அடம் பிடிக்கும் சி.பி.எம்.கோரிக்கை ஏற்கப்படுமா? என்று தெரியவில்லை.
அ.தி.மு.க.கூட்டணியில் உடன்பாடு ஏற்படும் முன்பாக ,தங்கள் அணியில் சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும் என்பது- ஸ்டாலின் விருப்பம்.
நடக்குமா? இன்று பார்க்கலாம்.
–பாப்பாங்குளம் பாரதி