டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சசர் ப.சிதம்பரம், நான் ஏன் கைது செய்யப்பட்டுள்ளேன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

திகார் ஜெயிலில் சிதம்பரத்தை, அவரது குடும்பத்தினர் தினசரி சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது குடும்பத்தினரிடம் தனது சார்பாக டிவிட் பதிவிடும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,

எனது சார்பாக டிவீட் செய்ய எனது குடும்பத்தினரை நான் கேட்டுக்கொண்டேன்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்….

‘இந்த வழக்கை உங்களுக்கு பரிசீலித்து பரிந்துரைத்த ஒரு டஜனுக்கும் அதிகமான அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை என்றால்,

நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? 

நீங்கள் கடைசியாக  கையொப்பத்தை வைத்ததால் மட்டுமே? 

என்னிடம் பதில் இல்லை.

அடுத்த டிவிட்டில்,

எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை.

யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.

என்று பதிவிட்டு உள்ளார்.