இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்திலும் இரட்டை இலை தொகுதியிலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைய கடுமையாக முயற்சித்தது தமாகா. ஆனால், அப்போது ஒற்றை இலக்க தொகுதிகளையே தருவதற்கு சம்மதித்த ஜெயலலிதா, அவை அனைத்திலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தார்.

ஆனால், இதனால் மிரண்டுபோன வாசன், விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, மிக மோசமாக மண்ணைக் கவ்வினார்.

ஆனால், இப்போது அதிமுக மிகவும் நெருக்கடியாக இருக்கும் ஒரு காலக்கட்டத்தில், அக்கட்சி மோசமாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்படுகையில், அக்கூட்டணியில் இணைந்து வெறும் 6 தொகுதிகளை மட்டுமே பெற்று, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த முடிவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், குறிப்பிடத்தக்க எந்த வாக்குவங்கியும் இல்லாத நிலையில், ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்கியது அதிமுக. அதற்கு பெரிய துணையாய் நின்றது பாஜக.

இந்த நன்றி கடனை அடைக்கத்தான், அந்த இரு கட்சிகளும் இடம்பெற்ற கூட்டணியில் நீடித்து நின்றுள்ளார் ஜி.கே.வாசன்.