சென்னை:  ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இன்றுமுதல் இ-பாஸ் முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அது எதற்கு என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சுற்றுலா தளங்களில் வாகனங்களை முறைப்படுத்தவே இ- பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.  இதனால் அந்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொடைக்கானல் வருவோர் இ பாஸ் பெறுவது கட்டாயமாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இந்த இ-பாஸ் நடைமுறை தொடர்பாக பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  சுற்றுலா பகுதிகளில் வசிக்கும் மக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்தாலும், அங்கு வணிகம் செய்யும் வணிகர்கள், சிறுவியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த இ-பாஸ் அறிவிப்பால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   இந்த நடைமுறை 6.5.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு 7.5.2024 முதல் 30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்துசெல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இபாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்துசெல்ல எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளதுடன்,  இதனால், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொடைக்கானல், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ-பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நீலகிரி ஆட்சியர் அருணா.  விவரங்களுக்கு : epass.tnega.org இணையதளத்துக்கு சென்று தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று ( 6ந்தேதிஸ்ரீ) காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் –

கொடைக்கானலுக்கு செல்பவர்களுக்கான இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு உள்ளது. விவரங்களுக்கு : epass.tnega.org இணையதளத்துக்கு சென்று தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர். இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.