நெட்டிசன்:

பிரபாகரன் அழகர்சாமி (Prabaharan Alagarsamy ) அவர்களின் முகநூல் பதிவு:

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% – 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள். வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள்.

தர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குதான் பெரிய இழப்பு.

பட்டியல் சாதியினருக்கு ஓரளவுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு இணையான அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகவில்லை.

ஆண்டஜாதி பெருமை பேசுகிற, கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும்தான் பெருமளவு இடத்தினை இழந்திருக்கிறார்கள்!