முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் (மேகதாது அணை) குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️

இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது.

நெட்டிசன்

அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு

——————————————————-


ர்நாடகாவில் மேகேதாட்அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர் சூளுரைக்கிறார்கள்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி மேகேதாட்அணையைக் கட்டுவதற்கான அனுமதியை இன்னும் எங்களுக்கு தரவில்லை. அவர் சமீப காலமாக தமிழ்நாட்டு பக்கமே சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சாதகமாகவே இயங்குகிறார். ஆனால் இங்கு கர்நாடகாவிற்கு வந்து மட்டும் ஓட்டு கேட்கிறார் என்று முறையிடுகிறார்.

இது பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் எதையும் சொல்லாமல் வாயைத் திறக்காமல் இருக்கிறார். ஏதோ துரைமுருகன் மட்டும் தேர்தல் நாளில் மேகேதாட் அணையை பற்றி ஏதோ குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அந்த அணையைக் கட்டினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரத்து குறையும் என்று தெரிந்தும் முதல்வர் ஸ்டாலின் இது பற்றி பேச மறுப்பது இந்திய கூட்டணியின் ஓட்டு வங்கிக் காகவா?

வெற்றி பெறும் வரை உம்மென்று இருந்துவிட்டு நாளை மேகேதாட் பிரச்சனை வருகிற போது எதுவும் செய்ய முடியாமல் கையைப்பிசைவது முதல்வரது வழக்கம் ஆகிவிட்டது.
மேகதாது அணை நீண்ட தொலைநோக்குப் பார்வையில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பங்கீட்டில் கூர்மையாக ஆராயப்பட வேண்டியது.

வழக்கம்போல் கொம்பை விட்டு வாலை பிடிப்பது இனி ஆகாது அதற்கான நிரந்தர முடிவுகளை இரு மாநிலங்களும் எட்ட வேண்டும்.

போக கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி ராஜா அவர்களின் மனைவி படு மோசமாக ராகுலை விமர்சனம் செய்கிறார்.

இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என்கிற தேசியக்கூட்டணிக் கட்சிக்குள்ளேயே ஒற்றுமையற்று இந்த முரண்பாடு நிகழ்வது எனில் இந்த இ.ந்.தி.யா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல தான் இருக்கிறது.

இந்தியக் கூட்டணியிடம் ஒரு கேள்வி நீங்கள் சிபி எம் ஐ வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? சரத் பவார் சரி படுவாரா? காஷ்மீர் பரூக் முதலில் வெட்டி விட்டார். இப்போது மீண்டும் இணைந்து கொண்டார். இப்படி மாநிலங்கள் பல்வேறு போக்கில் இருக்க பழைய ஜனதா கட்சி 1977 இல் அரசமைத்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவைகள் தாக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.

என்ன கேட்டால் அருகருகே இருக்கக்கூடிய மாநிலங்களின் பிரச்சனைகளை முதலில் தீர்த்து கொண்டு பிறகு இந்திய அளவில் நாடாளுமன்ற இணைப்பு மற்றும் கூட்டணி தலைமை பற்றி பேச வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளுக்குள்ளே முரண்பாடு வைத்துக்கொண்டு ஆட்சி ஒற்றுமையை எப்படி அவர்கள் வலியுறுத்த முடியும். நடைமுறைப்படுத்த முடியும்.

 21-4-2024 அன்று ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே நடைபெற்ற கடும் மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.

ராஞ்சியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, ‘உல்குலன் நியாய யாத்திரை’ என்ற பெயரில், மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்தது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.ஆனால் திட்டமிட்டு ராகுல் இதில் கலந்து கொள்ளவும் இல்லை.

இன்னும் எத்தனை முரண்பாடுகள் இருக்கிறதோ? இதுவரையிலும் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பற்றி வாயைத் திறக்கவில்லை.

#மேகேதாட்
#இந்தியகூட்டணி
#megathat
#IndiaAllaince
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-4-2024.