மும்பை,
ற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பார்வையற்றோர் அடையாளம் காண முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முப்பை உயர்நீதி மன்றம் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி விடுத்துள்ளது.
இதுகுறித்த வழக்கில், ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களின் மதிப்பை கண்டறிவதில் கண் பார்வையற்றோர் படும் அவதி குறித்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர் நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, தேசிய  பார்வையற்றோர் கூட்டமைப்பு தொடுத்துள்ள வழக்கினை விசாரித்த, மும்பை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ,
blind-man-copy
ரிசர்வ் வங்கி 6 வார காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பார்வையற்றோர் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அம்சம் கொண்டு ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தேசிய  பார்வையற்றோர் கூட்ட மைப்பின் செயலாளர் ஜாக்குயிம் ராப்பொஸ் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
அண்மை காலங்களில் கண் பார்வை குறைபாடு கொண்ட மக்கள் ரூபாய்  நோட்டுக்களை அடையாளம் காண்பதில் மிகுந்த அல்லல் படுகின்றனர் என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இருந்த  ரூபாய் நோட்டுக்கள்,  பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு கொண்ட மக்களால் பல வகையான ரூபாய் மற்றும் நாணயங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது.   இதற்கு காரணம்  நாண யங்களில் எழுத்துக்கள் துருத்தியவாறோ / சற்றே மேல் எழும்பியவாறோ அல்லது தொட்டுணரக்கூடிய வகை பாடுடனோ அமைந்திருக்கும்” என அந்த மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தது.
new-notes-copy
தற்போது வரும் நாணயங்கள் மற்றும்  நூறு ரூபாய்  நோட்டுகளில் அவ்வாறு எதுவும் வகைபாடு இல்லாத நிலையில், கண் பார்வையற்றோரால் நாணய மதிப்பை அடையாளம் காண முடிவதில்லை என ராப்பொஸ் கூறினார்.
புதிய ரூபாய் மற்றும் நாணயங்களின் வடிவமைப்பு குறித்து தங்களது கருத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி தேசிய  பார்வையற்றோர் கூட்டமைப்பினை கேட்டுக் கொண்டதாகவும் அம்மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.  ரூபாய் மற்றும் நாணயங்களின் வடிவம், அகலம், தடிமன் மற்றும் நிறக் கலவை குறித்த தங்களது பரிந்துரைக ளை தேசிய  பார்வையற்றோர் கூட்டமைப்பு ரிசர்வ் வங்கிக்கு அளித்ததாக ராப்பொஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரை அளிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பார்வையற்றோரின் உரிமையை பாதுகாக்கும் வகையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுகளின் வருகைக்கு பிறகு, பார்வையற்றோருக்கு பல்வேறு ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காண பயிற்சி அளிக்கும் தேசிய  பார்வையற்றோர் கூட்டமைப்பு பல இடர்பாடுகளை சந்திக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.