புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் இயந்திரங்களின் அனைத்து சீட்டுகளையும் எண்ணுமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் தயங்கியதேன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான உதித் ராய்.

அவர் கூறியதாவது, “ஒரு விஷயத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வருகையில், அதுகுறித்து வெளிப்படையாக இருப்பதுதானே முறை. எனவே, விவிபாட் விஷயத்தில் உச்சநீதிமன்றம் எதற்காக தயங்க வேண்டும்?

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 2 அல்லது 3 நாட்கள் தாமதமாக வெளிவந்தால் என்ன ஆகிவிடப்போகிறது? விவிபாட் சீட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் பெரியளவில் கோரிக்கை விடுக்கப்பட்டும் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

உச்சநீதிமன்றம் எல்லா நேரத்திலும் சரியாக நடந்துகொள்ளும் என்று கூறமுடியாது” என்றுள்ளார் உதித் ராஜ். மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்புதான் பாரதீய ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் உதித் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]