பெங்களூர்,
கர்நாடகாவில் வாழும் மக்கள் கட்டாயம் கன்னடம் கற்கவேண்டும் என்றும் கர்நாடகாவில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடர்களே என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இன்று கர்நாடக மாநிலம் உதயமான நாள். மாநிலத்தின் 62-வது உதய தினத்தையொட்டி, பெங்களூரில் இன்று விழா நடைபெற்றது. விழாவில் முதல் மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது,
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், இங்குள்ள மக்களுக்கு கன்னடம் தெரியவில்லை என்றால் அது மொழியை அவமதிப்பது போல் ஆகிவிடும். கர்நாடக மாநிலத்தில் வாழும் மக்கள் கன்னட மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தில் வசிக்கும் மக்கள் கன்னடர்களே. எனவே, இங்கு வாழும் மக்கள் தங்களது குழந்தைகளுக்கும் கன்னடம் கற்றுக்கொடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கன்னடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று கர்நாடகாவின் 62வது உதய நாளை யொட்டி கன்னட மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.