வாஷிங்டன்:

லக கோப்பை கிரிக்கெட்டில் ஜெயிக்கப்போவது யார்? என்ற கேள்விக்கு கூகுள்  சுந்தர்பிச்சை என் பதில் கூறினார் தெரியுமா? .

இறுதிப்போட்டியில் இந்தியாவும் – இங்கிலாந்தும் விளையாடும் என்று கூறி, யார் ஜெயிப்பார்கள் என்பதை தெரிவிக்க நாசூக்காக மறுத்துவிட்டார். சுந்தர்பிச்சையின் சமயோசிதம் பரபரப்பாக பேசப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  தற்போது ஆட்டம் பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ள நிலையில், மழை காரணமாக சில ஆட்டங்களும் தடை பட்டு வருகின்றன. இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்க இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின்  வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. கூகுள் மற்றும் இணையதளம் சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பளிச்சென்று பதில்களை கூறிய சுந்தர் பிச்சையிடம் உலக கோப்பை வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் உஷாரான சுந்தர்பிச்சை, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும், ஆட்டம் சிறப்பாகவும், சவால்கள் நிறைந்தும் தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதில் வெற்றி பெறப்போவது யார் என்பதை கூறுவதை தவிர்த்தார்.

இந்த நிகழ்ச்சியும்  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.