டெல்லி: சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போது யார் என்பது குறித்து பரபரப்புக்கும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி அகதளப்படுத்தி வருகிறது. இமாச்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதி செய்துஉள்ளன.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் இமாச்சலில் குதிரை பேரம் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்:
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளிலேயே இதுதான் மிக மிக அதிகம் ஆகும். பதிவான வாக்குகள் நாளை மறுதினம் (டிசம்பர் 8ந்தேதி எண்ணப்படுகிறது) வாக்கு எண்ணிக்கையில் வெற்றி தோல்வி குறித்து மதியத்திற்குள் ஓரளவு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இமாச்சலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி, அம்மாநிலத்தில் குதிரை பேரத்துக்கு வழிவகுத்துள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 35 இடங்களில் வெற்றிபெற வேண்டியது கட்டாயம். ஆனால் வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவித்துள்ளன.
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறியிருப்பதாவது, மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பாஜக 34 முதல் 39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல காங்கிரஸ் கட்சி 23 முதல் 28 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 0-1 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 38 இடங்களிலும் காங்கிரஸ் 28 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா டுடே ஆக்சிஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக 24 முதல் 34 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 40 இடங்களை வெல்லும் என தெரிவித்து உள்ளது.
ஜீடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 38 இடங்களையும், காங்கிரஸ் 23 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளத.
ஜான்கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 37 இடங்களையும், காங்கிரஸ் 29 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தல்:
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களுக்கு டிசம்பர் 1ந்தேதி மற்றும் டிசம்பர் 5ந்தேதி என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை 8ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 92 இடங்கள் தேவை. இதைத்தொடர்ந்து அங்கு 3 மும்முனை போட்டிகள் நிலவின. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி குஜராத் மாநிலத்தை அதகளப்படுத்தி வருகின்றன.
வெளியாகி உள்ள அனைத்து கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகி உள்ளது. 7வது முறையாக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் பாஜக அமர்வை உறுதி செய்துள்ளன.
இந்தியா டுடே – Axis My India கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 129 இடங்கள் முதல் 151 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 16 முதல் 30 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 9 முதல் 21 வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவி – பி. மார்க் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்படி, குஜராத்தில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி 2 முதல் 10 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டிவி 9 பாரத்வர்ஷா வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக 125 முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டு ஒஉள்ளது. காங்கிரஸ் 40 முதல் 50 இடங்கள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 03 முதல் 05 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ்-இடிஜி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 139 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி11 இடங்களிலும் வெற்றி பெரும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளை கைப்பற்றி தொடர்ச்சியாக 6ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.