ஸ்ரீநகர்,
நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்கள், அரசுக்கு எதிராக போராட நிதியுதவி செய்து வருவது யார் என்பது குறித்து மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
நாட்டின் அமைதியை குலைத்து பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது பயங்கரவாத இயக்கங்கள். இதுபோன்ற இயக்கங்கள் செயல்பட தேவையான நிதிகள் எங்கிருந்து வருகிறது.. அதை கொடுப்பது யார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் காஷ்மீரில் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல தலைநகர் டில்லியிலும் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தலைநகர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 17ந் தேதி ஜம்முவுல் தொழிலதிபர் சஹூர் அகமது ஷா வடாலி என்பவர் பயங்கரவாதி இயங்களுக்கு நிதி உதவி செய்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.