சென்னை:
விதிகள் மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘எஸ்.எஸ்.ஐ தகுதிக்கு கீழ் உள்ள அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கக்கூடாது என்று அரசாணையில் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் மீறினால் வசூலிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்த் தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை கடந்த 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சாலை விதிகளை மீறுவோர் உள்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடமும், ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடமும் அபராதம் வசூலிக்கும் நடைமுறையும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விதிகள் மீறும் வாகன ஓட்டிகளிடம் யார் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையை கூடுதல் தலைமைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை சுட்டிக்காட்டி, வாகன ஓட்டிகளிடம் யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், சிறப்பு நிலை துணை ஆய்வாளர் எனப்படும் எஸ்எஸ்ஐ (கிரேட் 2) நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் எஸ்எஸ்ஐக்குக் குறைவான அதிகாரத்தில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்கக் கூடாது என்றும், சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து வேறு எங்கு வேண்டு மானாலும் அபராதம் வசூலிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அரசாணை நகல்: