டெல்லி: துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது விவாதப்பொருளாக மாறி உள்ளன. பீகாரை சேர்ந்த மத்திய இணைஅமைச்சரை பாஜக அரசு தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஒருவரே துணை ஜனாதிபதியாக வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், அந்த பதவியை பிடிக்க, பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்குள் போட்டிகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு பீகாரை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் இந்த போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்தவொரு முறையான அறிவிப்புக்கும் முன்னதாக அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போட்டியில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பீகார் ஆளுநர் முகமட் ஆரிஃப் கான், முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது சிறிது நேரம் ஊகங்கள் நிலவிய போதிலும், ஜே.டி.(யு) உள்கட்சியினர் அதை நிராகரித்தனர். “இது நடப்பதாகத் தெரியவில்லை,” என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
ஏற்கனவே ராஜ்யசபா தலைவர் இடத்தில் இருந்து, மாநிலங்களவையை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நடத்தி வரும் நிலையில், அவரை துணை குடியரசு தலைவராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இவர் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில், பீகார் மாநிலத்தைச் சேந்த முன்னாள் முதல்வரின் மகனை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூரின் மகன் மத்திய இணைஅமைச்சரான ராம்நாத் தாக்கூர்-ஐ (மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர) நியமிக்க முடிவு செய்திருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத பல NDA நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை குடியரசு தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமிக்கும் வகையில், ராம் நாத் தாக்கூர்-ஐ தேசிய ஜனநாயக கூட்டணி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்கர் திடீரென மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார். இந்தச்செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் முதல் அவையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையேற்று நடத்தி வருகிறார். தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதால், குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில், துணைகுடியரசு தலைவருக்கான போட்டி என்டிஏவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, புதிய மாநிலங்களவை தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் நடவடிக்கை மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. விரைவில், புதிய குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதவிக்கான போட்டியில் மாநிலங்களவை துணைத் தலைவரும், ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பியுமான ஹரிவன்ஷ் சிங் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத்தாக்கூர்-ஐ தேர்வு செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
ஆளும் என்டிஏ கூட்டணி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமிப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத பல தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். தற்போது விவசாயத் துறை இணையமைச்சரும், பீகார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கற்பூரி தாகூரின் மகனுமான ராம் நாத் தாக்கூர், முன்னணி வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
இவர் நை (நாவி) சமூகத்தைச் சேர்ந்தவர், இது அதி-பிச்சாரா பிரிவின் கீழ் வருகிறது, மேலும் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக சாதி இயக்க வியலுக்கு ஒரு சான்றாகக் கருதப்படுகிறது.
நாடாளுமனற் இரண்டு அவைகளிலும் NDA 422 எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால், அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான 394 வாக்குகளை விட இது ஒரு வசதியான மெத்தையைக் கொண்டுள்ளது. ஜூலை 26 க்குப்பிறகு முடிவு எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒருமித்த வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய வி-பிக்கான முழு பதவிக்காலம்
புதிய துணை குடியரசு தலைவரி, முழு பதவிக்காலம் பதவியில் இருப்பார். பிரிவு 67 கூறுகிறது, “துணை ஜனாதிபதி தனது பதவியில் சேரும் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார்.”
இவரை தேர்ந்தெடுக்கும் வகையில் பிரிவு 68 இன் படி தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் ஆணையம் காலியிடத்தை அறிவித்த பிறகு செயல்முறை தொடங்கி 32 நாட்களில் தேர்தல் முடிவடைந்து, புதிய குடியரசு துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்படி?
தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவலின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பிரிவு 68(2) இன் கீழ், குடியரசு துணைத் தலைவர் பதவியில் உள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல், காலியான உடனே சீக்கிரமாக நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இதனால், இந்தத் தேர்தல் அடுத்த 60 நாள்களுக்குள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தலைவருக்கான பணியை, இடைக்காலத் தலைவராக யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். துணைத் தலைவரின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. ஆனால், துணைத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் இந்தப் பணியைச் செய்யலாம்.
அரசியலமைப்பு விதிகளின்படி, இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக விரும்பும் எந்தவொரு வேட்பாளரும் இந்தியக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
இதுவரை கடைசியாக பணியாற்றிய இரண்டு குடியரசு துணைத் தலைவர்களான வெங்கையா நாயுடு மற்றும் ஜகதீப் தன்கர் இருவரும் பாஜகவில் மிகவும் நெருக்கமாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாவும் இருந்தனர். இந்த நிலையில் புதிய துணைக் குடியரசுத் தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.