டெல்லி:  241பேரை கொண்ட அகமதாபாத்  ஏர்இந்தியா விமான விபத்து  தொடர்பாக  மத்தியஅரசு வெளியிட்டுள்ள  முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதுடன், இதுதொடர்பாக விமானிகள் பேசிய அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் கிடைத்துள்ளன.

குஜராத் மாநிலம் அகமபாத் விமான நிலையம் அருகே  ஜூன் 12ஆம் தேதி  அன்று புறப்பட்ட சில நொடிகளில் ஏர்இந்தியா விமானம் அருகே உள்ள ஒரு கட்டித்தின்மீது மோடி, வெடித்து சிதறியது.  இந்த விமானத்தில் 241பேர் பயணம் செய்த நிலையில், ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்த நிலையில், 241 பேர் உயிரிந்துள்ளனர். மேலும், விமானம் மோதி வெடித்து சிதறியதில் அருகே இருந்த பொதுமக்களும் பலியாகினர். மொத்தம் 273 பேர் பலியாகி உள்ளர்.

இநத் நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் கிடைத்துள்ளன. 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்ட‌து விமான விபத்து புலனாய்வு பணியகம்  ( (AAIB) வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில், அறிக்கையின் மூலம் விபத்து ஏற்பட்டபோது விமானத்தின் 2 விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இரண்டு என்ஜின்களும் திடீரென சக்தியை இழந்து குறித்து, விமானிகள் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதியில் பதிவான உரையாடல் முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டி உள்ளது.

ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிக்கப்பட்டு இருப்பதுடன்,  எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப‌ட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாத‌து குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது, அவர்கள் இருவரும் பேசிய குரல் பதிவு மூலம் அம்பலமாகி உள்ளது.  ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவும் வெளியாகி உள்ளது.

Air India Plane Crash: விமானிகள் பேசிக்கொண்டவை என்ன? 

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏற் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி 13:38:42 (மதியம் 1 மணி 38வது நிமிடம் 42வது வினாடி) அதன் அதிகபட்ச புறப்படும் வேகமான 180 Knots-ஐ எட்டியது. வான் வேகத்தைக் குறித்தபோது, இரண்டு எஞ்சின் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகளும் ‘Run’ என்ற நிலையில் இருந்து ‘CutOff’ நிலைக்கு மாறி உள்ளன.  அப்போதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் உரையாடல் நடந்துள்ளது.

Cut Off நிலைக்கு மாறி உடன் ஒரு விமானி, “நீங்கள் ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?” என்று கேட்டார், மற்றவர், “நான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளித்தார். விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டனாக சுமீத் சபர்வால் மற்றும் துணை கேப்டனாக கிளைவ் குந்தர் செயல்பட்டனர். இதில் யார் கேள்வி எழுப்பியது, யார் பதில அளித்தது என்பதை தெளிவாக தெரியவில்லை.

Air India Plane Crash: முதற்கட்ட அறிக்கையின் வேறு தகவல்கள்

Cutoff நிலைக்கு ஆரம்பக்கட்டத்தில் சென்ற போது பத்து வினாடிகளுக்குப் பிறகு, 13:38:52 மணிக்கு, முதல் எஞ்சனின் (Engine 1) சுவிட்ச் ‘ரன்’ நிலைக்கு என்று திரும்பியது. பின்னர் நான்கு வினாடிகள் கழித்து, 13:38:56 மணிக்கு, இரண்டாவது எஞ்சனின் (Engine 2) சுவிட்சும் ‘ரன்’ நிலைக்கு என்று திரும்பியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு எஞ்சின்களுக்கும் எக்ஸாஸ்ட் கேஸ் வெப்பநிலை (EGT) அதிகரித்ததை எஞ்சின் மற்றும் விமான விமான ரெக்கார்டர் (EAFR) சுட்டிக்காட்டுகிறது. இது எஞ்சினை மீண்டும் இயக்க முயற்சித்ததை காட்டுகிறது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு என்ஜின்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுப்பாய்வுக்காக அவற்றைப் பாதுகாத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மாணவர் விடுதியின் கட்டடத்தில் விமானம் மோதிய இடத்தில் ட்ரோன் மேப்பிங் நிறைவடைந்துள்ளது. மேலும் இடிபாடுகள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன. EAFR-இன் பின்புறம் கணிசமாக சேதமடைந்திருப்பாகவும், தரவு பதிவிறக்கத்தில் பிரச்னை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787-8 விமானம் அல்லது GE GEnx-1B எஞ்சின் ஆபரேட்டர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக எவ்வித பாதுகாப்பு பரிந்துரைகளையும் AAIB தற்போது வழங்கவில்லை. பல்வேறு தரப்பினரிடம் இருந்து இன்னும் கூடுதல் ஆதாரங்கள் திட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 26ஆம் தேதி அன்று அகமதாபாத் விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு நிலை அறிக்கையை வெளியிட்டது. சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களின் ஆழமான பகுப்பாய்வைத் தொடர்ந்து இறுதி AAIB அறிக்கை வெளியிடப்படும் என அதில் தெரிவித்திருந்தது.

 

241 பேரை பலி கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்! டாடா