இருந்தபோதும், இந்த மருந்து தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்து மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகளை வெளியிட்டபோது, அதில் இந்த மருந்து இடம்பெறவில்லை. இருந்தபோதும், இந்த மருந்திற்கான தட்டுப்பாடு குறையவில்லை.
ரெம்டெசிவிர் மருந்தால், தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவுல், இந்த மருந்தால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய துடிப்பு குறைவது ஆகியவையும் ஏற்படலாம். “ஏற்கனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயத் துடிப்பும் குறையுமானால், அவர் அபாயநிலையை அடையலாம்” என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இருந்தாலும், உலகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கிராக்கி இருந்து வருகிறது. இந்த மருந்தால் கொரோனாவுக்குப் பலனளிக்கிறதா என்பது குறித்து இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் சாதகமான முடிவுகள் ஏதும் கிடைக்காத நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.