சுவிட்சர்லாந்து:
ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மக்கள் 21- 28 நாட்களுக்குள் பைசர் மற்றும் பயோடெக் நிறுவன தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக பரவுவதால் சுகாதார சேவைகள் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசாங்கம் புதிய முழு அடைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன.

இதனால் உலக மக்களுக்கு 21- 28 நாட்களுக்குள் பைசர் தடுப்பூசியின் இரண்டு அளவுகள் கொடுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார மையத்தின் நோய் தடுப்பு தொடர்பான நிபுணர்கள் ஆலோசனை குழுவின் தலைவரான அலெஜான்ரோ க்ரேவியோட தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை அனைத்து நாடுகளும் தங்களுடைய சொந்த தொற்றுநோய் பரவல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அலெஜான்ரோ தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel