சென்னை:
தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமல், தமிழக அரசியலுக்கு ஒருவரையும், தேசிய அரசியலுக்கு ஒருவரையும் என இரண்டு செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.
இன்று அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள கமல், இன்று மாலை கட்சியின் பெயர், கொடி, சின்னம், கொள்கைகள் குறித்து மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில், கமலுக்கு சினிமாவுக்கு என தனி செய்தி தொடர்பாளர் உள்ள நிலையில், தற்போது அரசியலுக்கு என இரண்டு செய்தி தொடர்பாளர்களை நியமித்து உள்ளார்.
தமிழக அரசியலுக்கு ஏற்றவாறு, வார இதழ் ஒன்றில் பத்திரிகையாளராகவும், தொலைக்காட்சிகளில் தொடர்களையும் இயக்கி உள்ள ப.ராஜநாராயணனும், தேசிய ஊடகங்களுக்கு மாந்தவி ஷர்மா என்ற பெண்ணையும் நியமனம் செய்துள்ளார்.
மாந்தவி ஷர்மா ஏற்கனவே ஷாருக்கான் நடித்த படங்களுக்கு செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்தவர்.