சோரோ-வின் இழப்பால் தனது வாழ்வு சூனியமானதைப் போல் உணர்வதாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது செல்ல நாய் குட்டியான சோரோ-வை தனது செல்ல பிள்ளையைப் போல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தது தன்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு தெரியும்.

அந்த செல்லக்குட்டி இப்போது உயிருடன் இல்லை என்று கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் பதிவிட்டிருந்தார்.

சோரோ-வின் இழப்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் மனதளவில் வெகுவாக பாதித்திருப்பதோடு வாழ்வே பூஜ்யமானதாக உணர்வதை அடுத்து சில நாட்கள் தான் தனிமையில் இருக்கப்போவதாக தனது நாய்க்குட்டி சமாதியின் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.