வாஷிங்டன்:

லக அளவில் சக்திவாய்ந்த முதல் 100 பெண்கள் குறித்த பட்டியலை போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இதில் இந்தியாவை சேர்ந்த ஐசிஐசிஐ வங்கி தலைமை அதிகாரி, எச்சில் நிறுவன தலைமை அதிகாரி ரோஷினி, நடிகை பிரியங்கா சோப்ரா உள்பட பலர்  இடம் பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. உலக அளவில், அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

முதலிடத்தை  ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும்  பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் 4-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில்  ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த  சாந்தா கோச்சார் 32-வது இடத்தை பெற்றுள்ளார்.

அதையடுத்து பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான எச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57வது இடத்திலும், , பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71-வது இடத்திலும் உள்ளனர்.

அதைத்தொடர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 92-வது இடத்திலும், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்திலும்,.  அமெரிக்க வம்சாவளி பெண்ணான ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.