டெல்லி:
இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 15ந்தேதி அன்று இந்திய சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ள னர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகனாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்திவீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில், நமது வீரர்களை ஆயுதமின்றி லடாக் எல்லைக்கு அனுப்பியது யார் என்றும், இதற்கு யார் பொறுப்பு என்றும் வினவியுள்ளார்.
இந்திய வீரர்களை கொன்றதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறிழைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.