“மத்திய அரசு செய்வது போல, தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஓராண்டு சாதனை பட்டியலை வெளியிட வேண்டும்” என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மெச்சிக்கொள்ளும், மத்திய அரசின் சாதனை எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?

நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் பங்குச் சந்தையை எடுத்துக்கொள்வோம்.

மோடி அரசின்  மூன்று ஆண்டு  ஆட்சி இந்தியாவின் பங்கு சந்தையின் மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக  டாடா, பிர்லா, அம்பானி, பஜாஜ் போன்ற பெரு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் லா 1 லட்சம் கோடி சம்பாதித்துள்ளன.

இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்:

மோடியின் மூன்று ஆண்டு ஆட்சியில்  முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவனம் 1 லட்சம் கோடிகளைப் பங்கு சந்தையில் இருந்து லாபமாகப் எடுததிருக்கிறது.  இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீடுகள் 30 சதவீதம் உயர்ந்து 4.5 லட்சம் கோடிகளாக  உயர்ந்துள்ளது.

அம்பானி சகோதரர்கள்

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ரிலையன்ஸ் கேப்பிடல் மூலமாக பெரும் லாபத்தைப் பெற்றுள்ளது. அதே நேரம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கீழே இறங்கி உள்ளன.

பிரதமர் மோடியின் நண்பரான  அதானி குழுமம் 30 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது. ஆகவே முதலீட்டாளர்களின் லாபம் 1.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

குமார மங்கலம் பிர்லா குழுமத்தின் பங்கு முதலீடுகளுள் 1 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது.
பஜாஜ் குழுமத்தின் லாபம் 1.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

எச்டிஎப்சி குமத்தின் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் 3 லட்சம் கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளன. அதனால் எச்டிஎப்சி குழுமத்தின் சொத்து மதிப்பு 6.7 லட்சம் கோடி ரூபாயாக  உயர்ந்துள்ளது.

அதானி – மோடி

டாடா குழும பங்குகளின் லாபம் 20 சதவீதம் அதிகரித்து 1.45 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆகவே  இவர்களுடைய சொத்து மதிப்பு 8.55 லட்சம் கோடி ரூபாயாகச் சொத்து மதிப்பு உள்ளஹ்டு. டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 92,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வேதாந்தா குழுமத்தின் லாபம் 75,000 கோடியாகவும், எல்அண்ட்டி நிறுவனத்தின் லாபம் 60,000 கோடியாகவும், கோத்ரேஜ் நிறுவனத்தின் பங்குகள் 50,000 கோடியாகவும், மகேந்திரா குழுமத்தின் லாபம் 35,000 கோடியாகவும் உயரந்துள்ளன.

இந்துஜா, ஐசிஐசிஐ குழுமம், ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் லாபமும் மூன்று வருடங்களாக சிறப்பான லாபம் ஈட்டியிருக்கின்றன.

சரி.. மக்கள் பணத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையைப் பார்ப்போம்.

பொதுத் துறை நிறுவனங்கள் பல நட்டத்தைச் சந்தித்திருக்கின்றன.  அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களின் சொத்து மதிப்பும் அதள பாதாளத்துக்கு போய்விட்டன.

பொதுத் துறை நிறுவனங்கள் மும்பை பங்கு சந்தையில் 22 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்து  3.65 லட்சம் கோடி மட்டுமே லாபம் பெற்றுள்ளன.  மூன்று வருடங்களில்  50 லட்சம் கோடிகள் லாபம் வந்துள்ள நிலையில் இவை 8 சதவீதம் லாபம் கூடப் பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்திய பங்கு சந்தையில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 16 சதவீதம் இருந்தும் 3.65 லட்சம் கோடிகள் மட்டுமே லாபம் பெற்றுள்ளன என்பது வருத்தத்துக்குறியது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.