டில்லி,
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், தனிநபர்களும், வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.
இவர்களில் தனிநபர்கள், தங்களது வங்கிக் கணக்கில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அவர்களுக்கு வருமானவரித்துறை “கடிதம்” அனுப்பி வருகிறது.
வருமானவரித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, “இது வழக்கமான கடிதம்தான். நோட்டீஸ் அல்ல.
தங்களுக்கு பணம் வந்த விதத்தை வருமானவரித் துறையினரிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். அவ்வளவுதான்” என்றார்.