உலக நாடுகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு இந்த தாக்குதல் இருந்ததை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் பாபுநகர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி, மற்றும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 3 ஆய்வக சோதனைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது” என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜிகா வைரஸ் பரவலை கண்டுபிடிக்கவும் அதைத் தடுக்கவும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. இது வரை சுமார் 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு முதலில் லேசான காய்ச்சல் வரும். பின்னர் தோலில் அரிப்பு, தடை மற்றும் மூட்டு வலி அல்லது தலைவலி ஏற்படும். இந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு இருக்கும். பகல் நேரத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களே ஜிகா வைரஸை பரப்புகின்றன.

இந்த வைரஸால் பாதிக் கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, சிறிய தலை, நரம்பு மண்டல பாதிக்கப்பட்ட குழ ந்தைகள் பிறக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, மூளை பாதிப்பு, பார்வைக் குறைவு, காது கேளாமை உள்ளிட்ட பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பையும், முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தில் நடந் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு காரணமாக இந்த தகவலை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்டது குறைந்தளவு தாக்குதல் தான். எதிர்காலத்தில் இது மேலும் பரவ வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.