லக்னோ
பாஜகவுக்கு வாக்களிக்காதோர் எவ்வித உதவியையும் நாடி எங்களிடம் வர வேண்டாம் என உபி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலமும் ஒன்றாகும். இங்குள்ள ஹைதர்கர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தினேஷ் ராவத் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
தினேஷ் ராவத் செய்தியாளர்களிடம்,
“எங்களுடன் எப்போதும் உள்ளவர்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதைப் போல் எங்களை எதிர்ப்போர் 2024 வரை தங்கள் எதிர்ப்பை தொடர்வார்கள். நான் எப்போதும் எதிர்ப்பவர்களை மதிப்பது கிடையாது.
எனவே பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எங்களிடம் எவ்வித உதவியை நாடியும் வர வேண்டாம், நாங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு உதவ மாட்டோம். வரும் 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராகும் வரை காத்திருங்கள். அதுவரை நாங்கள் உங்களுக்கு உதவ மாட்டோம்”
எனத் தெரிவித்துள்ளார்.
சட்டசபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயல்பட வேண்டிய நிலையில் உபி பாஜக உறுப்பினர் தினேஷ் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளது ஆணவத்தின் உச்சக்கட்டம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.