அதிபர் ஒபாமாவின் மகள் நடாஷா எனும் சாஷா தான் சுவைத்து பார்க்க விரும்பும் உணவைச் சமைத்துத் தரவும் அவரின் கட்டளைகளுக்குச் சேவையாற்றவும் 24/7 நேரமும் சமையல்காரர்களும் பணியாளர்களும் வெள்ளை மாளிகையில் உள்ளனர்.
ஆனால் இந்த கோடைக்கால விடுமுறையில் வித்தியாசமான ஆசையை நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார்.மற்றவர்களுக்குத் தேவையான உணவைப் பரிமாறும் அனுபவம் எப்படி இருக்கும் எனத் தெரிந்துக் கொள்ள விரும்பிய அவர், ஒரு கடல் உணவு விடுதியில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
ஒபாமாவின் இளைய மகள், நடாஷா (வயது 15) தற்போது நான்சி உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.,
அமெரிக்கா-மசகுசெட்ஸ் வைன்யார்ட் டில் உள்ள பிரபல நான்சி உணவகத்தில் வறுத்த கடல் உணவு மற்றும் பால்-பானங்கள் விற்கப்படுகின்றது.
ஒரு நீல சட்டை மற்றும் தொப்பி மற்றும் காக்கி சீருடையில் அதிபரின் மகள் பம்பரமாய்ச் சுழன்று பசியுடன் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் என்ன சாப்பிட விரும்பிகிறார்கள் எனக் கேட்டு ஆர்டர் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு முறை தொடர்ச்சியாய் ஜனாதிபதியாக இருக்கும் ஒபாமா, தமது குழந்தைகளை முடிந்தவரை எளிமையான வாழ்க்கை வாழக் கற்றுகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்.
அதனால் தான் அவரது மகள் சாஷா பிரபலமான உணவகத்தில் வேலை செய்யும் அனுபவத்தை பெறுவதற்காகச் சேர்ந்துள்ளார்.
ஒபாமா குடும்பத்தினர் மசகுசெட்ஸ் -வைன்யார்ட் செல்லும் போதெல்லாம் விரும்பிச் செல்லும் இடம் நான்சி உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்டன் ஹெரால்ட் தகவல் படி,
நடாஷா எனும் தமது முழுப்பெயரிலேயே சாஷா அங்கு ஷிஃப்டு முறையில் பணி புரிகின்றார்.
இவருக்குப் பாதுகாப்பாய் ஆறு இரகசிய சேவை முகவர் கண்காணித்து வருகின்றனர்.
நான்சி உணவகத்தில் பணியபுரியும் ஒரு ஊழியர், இந்தப் பெண் வேலைக்கு சேர்ந்தபோது இவர் யாரென எங்களுக்குத் தெரியாது. ஆனால், இவரைச் சுற்றி ஆறு பேர் இவருக்காக உதவி செய்துவருவதை ஆச்ச்ரியத்துடன் பார்த்தோம். பிறகு தான் அவர் நடாஷா என்பது எங்களுக்குத் தெரியவந்தது. நடாஷா தரைத்தளத்தில் வேலை செய்கின்றார். அதிபர் மகளுடன் வேலை பார்ப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கின்றது. ” என்றார் பூரிப்புடன்.
நான்சி உணவக உரிமையாளர் ஜோ மொஜாபர் ஒபாமா குடும்பத்திற்கு பரிச்சயமானவர். அவர்தான் நடாஷாவிற்கு கோடை வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.
தினமும் அதிகாலையில்
நடாஷா நான்கு மணி நேர வேலை பார்த்து வருகிறார்.
வரும் சனிக்கிழமை வரை நடாஷா அங்குப் பணியில் இருப்பாரென நம்பப்படுகிறது. ஒபாமா தன் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காகக் குடும்பத்துடன் அங்கு வந்து சேர்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை தனது பணிநேரமுடிவில், 15 வயதான நடாஷா தனது பாதுகாப்பு பரிவாரங்களுக்கு உணவு கொண்டு வந்து எஸ்.யூ.வி காரில் புறப்பட்டுச் சென்றதை காணமுடிந்தது.
நான்சி உணவகத்தில் பணிபுரியும் மற்றொறு பெண், “நடாஷா சில நாட்களாக இங்குப் பணியாற்றிவருகின்றார். இது ஒரு அசாதாரணமான விசயம்” என்றார்.
நன்றி : ஹஃப்ஃபிங்கம் போஸ்ட்.