சென்னை:

சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றுக்கொண்டுள்ளனர்,  தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று சென்னை  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடெபற்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இடையே போட்டி நடைபெற்றது. சிஎஸ்கே அணிக்கு கொல்கத்தா அணி நெருக்குதல் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், சிஎஸ்கே பவுலர்களான தீபக் சஹர், ஹர்பஜன்சிங் போன்றோரின் பந்து வீச்சை எதிர்கொள்ளாமல் மளமளவென வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது. தொடர்ந்து களமிறிங்கிய சிஎஸ்கே அணி அநாயசமாக ஆடி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தோனியுடம், செய்தியாளர் ஒருவர்,  ‘சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தோனி,  எங்கள் உறவு மிகவும் சிறப்பானது. உண்மையிலேயே அவர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்… தோனியின் பதில் சென்னை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது… தோனிக்கு விசில் போடு என்று பதிவிட்டு வருகிறார்கள்…