பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு  வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய காப்டன், தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவர்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியை வர்ணனை செய்துகொண்டிருக்கும் போது, இதயப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வலியால் துடித்தார். இதையடுத்து அவர் உடடினயாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார்.

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் போது ரிக்கிபாண்டிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாண்டிங்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

ரிக்கி பாண்டிங் சேனல் 7 க்கு வர்ணனை செய்கிறார். பெர்த்தில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியிலும் அவர் வர்ணனையாளர் குழுவில் இருந்தார். போட்டி மதிய உணவு இடைவேளையின் போதுதான் பாண்டிங் வர்ணனை அறையை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

உணவு இடைவேளையின் போது, ​​பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தன்னுடன் பணிபுரிபவர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். மேலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர் சொன்னவுடன் மருத்துவக் குழுவினர் அங்கு வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ரிக்கி பாண்டிங் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சேனல்7 செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மீதமுள்ள இன்றைய கவரேஜுக்கு அவரால் கருத்துரை வழங்க முடியாது என தெரிவித்து உள்ளது.