ஓட்டல் அறைகளில் எந்த நாட்டவர்கள் அதிகம் திருடுகின்றனர்?

Must read

டில்லி

லகெங்கும் உள்ள ஓட்டல் அறைகளில் உள்ள  பொருட்களை அதிகம் எந்த நாட்டவர் திருடுகின்றனர் என்பதன் கணிப்பு வெளியாகி உள்ளது

சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த ஒரு குடும்பத்தினர் அரையை காலி செய்து செல்லும் போது அறையில் இருந்த ஓட்டலுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன்ர்.  இவற்றில் துண்டுகள், எலெக்டிரானிக் சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பல பொருட்கள் இருந்துள்ளன.  இந்த நிகழ்வு வீடியோ பதிவாகி வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களில் சிலர் இவ்வாறு திருடுவது இந்தியர்களின் மனப்பான்மை எனத் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.   ஓட்டலில் உள்ள பொருட்களை எடுத்துச் செலவது என்பது  பல நாட்டினரும் செய்வதே என ஒரு சிலர் வாதாடி வருகின்றனர்.   இந்நிலையில் ஓட்டல்களுக்குச் சொந்தமான பொருளை அறையில் இருந்து எடுத்துச் செல்பவ்ர்கள் குறித்த கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் அதிக அளவில் திருடுபவர்கள் வரிசையில்

அர்ஜெண்டினா – 71%

சிங்கப்பூர் – 71%

ஸ்பெயின் – 70%

ஜெர்மனி – 68%

அயர்லந்து _ 67%

ரஷ்யா – 69%

மெக்சிகோ – 59%

இத்தாலி – 57%

ஜப்ப்பான் – 56%

அமெரிக்கா – 53%

என உள்ளது

More articles

Latest article