ஹெல்சிங்கி

சாதாரண காய்கனி அங்காடிகளை விட குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளே கொரோனா பரவுவதற்கு உகந்த சூழலைக் கொண்டதென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பின்லாந்தின் ஆல்தோ பல்கலைக் கழகம் மற்றும்  மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட்  ஆஃப் டெக்னாலஜி ஆகியவை தனித்தனியே இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டன.

முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளிருக்கும் காற்று வெளியேற்றப்படும். ஆனால் COVID-19  உள்ளிட்ட வைரஸ்கள் காற்றைவிட 20 மைக்ரோமீட்டர்  நுண்ணியவை.

எனவே கொரோனாத் தொற்றுடைய ஒருவர் குளிரூட்டப்பட்ட காய்கனி அங்காடியில் தும்மினாலோ அல்லது இருமினாலோ வைரஸ்கள் அந்த இடத்திலேயே பல நிமிடங்களுக்கு இருக்கும்.

மேலும் அவ்வாறு வெளிப்பட்ட  வைரஸ்கள் தடையில்லாமல்,  காற்றில்லாத இடத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும்.CSC சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் தி ஃபினிஸ் ஐடி சென்டர் ஃபார் சயின்ஸ்  லிமிட்டெட் இது தொடர்பாக 3D பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

அதில்  ஒரே நபர்  குளிரூட்டப்பட்ட காய்கனி அங்காடியிலும்,  சாதாரண காய்கனி அங்காடியிலும்  வாங்கும் போது   அவருடைய இருமல் மற்றும் தும்மல் வழியே கிருமிகள் வெளிப்படுவது  பதிவாக்கப்  பட்டிருக்கும். 

எனவே இந்த சூழலில் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கனிகள் வாங்குவதை தவிர்த்து  சாதாரண கடைகளில் வாங்குவோம். இச்செயல் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு கொரோனாத் தொற்றிலிருந்தும் நம்மை காக்கும்…