லக நாடுகளில் பேயாட்டம் போடும் கொரோனா வைரஸ் இதுவரை  1லட்சத்து 3ஆயிரத்து 513 பேரை பலிவாங்கி உள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனாவின் தீவிரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உலக வல்லரசான அமெரிக்கா உள்பட பல நாடுகள் திணறி வருகின்றன. இத்தாலி, ஸ்பெயின், பிரேசில் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த உலகமும் இந்த கொடியை வைரசை கூண்டோடுஅழைக்க  போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த கொடிய வைரசால் இதுவரை 17லட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல பலி எண்ணிக்கை 1,03,513 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் நோய் பாதிப்பில் இருந்து, 3லட்சத்து 82ஆயிரத்து 073 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு  வாரத்தில் பலி எண்ணிக்கை  நாற்பதாயிரத்தை கடந்திருந்த நிலையில்  இந்த ஒரே வாரத்தில் ணுமார் 60,000 பேரின் உயிரை எடுத்துள்ளது இந்த கொடிய வைரஸ்.  இந்த பலி எண்ணக்கை  இது ஒட்டுமொத்த உலகையும்  அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரத்து  780 ஆக உள்ளது ,  அங்கு பலி எண்ணிக்கையும் 18 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது

ஏற்கனவே பலி எண்ணிக்கையில் முன்னணியில்  உள்ள இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 549 ஆக உள்ளது. அதை அமெரிக்கா மிஞ்சி உள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 81 ஆக உள்ளது .

நான்காவது இடத்தில் உள்ள பிரான்சில் இதுவரை 13 ஆயிரத்து 197 பேர் வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் .

இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன,

இதுவரையில் இந்த வைரஸை  எப்படி கட்டுப்படுத்துவது என புரியாமல் உலகநாடுகள் திகைத்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என  என்றும்  இந்த வைரசை மட்டுபடுத்துவதற்கான ஒரு வழி என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வைரசுக்கான பலி எண்ணிக்கை மேலும் தொடரும் என்றும் அடுத்த வாரத்தில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது எனவும் அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.