சென்னை

பெரிய தலைவர்கள் வரும் போது மட்டும் நகரம் சுத்தம் செய்யப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசைக் குற்றம் சாட்டி உள்ளது.

இன்றும் நாளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்.   அவர் தற்போது சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி உள்ளார்.  அவருக்கு ஆட்ட பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.   ஏற்கனவே சென்னை வந்து மாமல்லபுரம் சென்றுள்ள பிரதமர் மோடியை அவர் இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்க உள்ளார்.

சீனப் பிரதமரின் வருகையையொட்டி நகரில் ஈசிஆர், ஓஎம் ஆர் உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ன்னை நகரில் பேனர் கீழே விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது

இவ்விசாரணையில் நீதிபதிகள் அமர்வு, “தற்போது மாமல்லபுரம் மற்றும் சென்னை நகர் மிகவும், சுத்தமாக ஆகி உள்ளது. பெரிய தலைவர்கள் வரும் போது மட்டும் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது.  தமிழ்நாடு சுத்தமாக விளங்க வேண்டும் என்றால் அடிக்கடி இது போலத் தலைவர்கள் வருகை நிகழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.