சென்னை:  நடிகர் விஜ்ய்யின்  அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு  திருச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில், விக்கிர வாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில்,. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் துவங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக அரசியலலில்  காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களை ஊக்குவித்து வருவதுடன் பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தற்போது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.  இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்ததிட்டமிட்டு வருகிறார்.  இந்த மாநாட்டை மதுரையில் அல்லது திருச்சி மற்றும் சேலம் உள்பட பல இடங்களில்  நடத்த திட்டமிட்டிருந்தநிலையில், அங்ககெல்லாம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தே நேரில் சென்று ஆய்வு செய்தார்.  ஆனால், அவர்கள் கேட்ட இடங்களுக்கு  அரசு அனுமதி மறத்து விட்டது.

இதனால்,  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்  முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த மாநாட்டை நடத்த  60 ஏக்கரில் இடம்  பார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்ளும்  வகையில், தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.   இந்த மாநாடு வரும் செப்டம்பரில் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம் மாநாடு நடத்த தவெக தரப்பில் இன்னும் இடத்தை தேர்வு செய்யவில்லை என கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் தவெக கேட்கும் இடங்களில் வேண்டுமென்றே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் மாநாடுக்கு முன்பே விஜய்க்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் விஜய்க்கு அழுத்தம் ஏற்படுவதாக செய்தி வெளிவந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கோபத்தை பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டம் இட்டள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.