சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்  இந்திய பெண்கள் தங்களது தாலியை அடமானம் வைக்க நேரிட்டது. அப்போது பிரதமர் எங்கே இருந்தார்? என்றும், தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி எப்படி புரிந்துகொள்வார்  என்றும்  தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே வெறித்தனமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொல்லையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டியதுடன்,  நமது நாட்டின்  ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக மோதி கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.  இந்த நிலையில்,  பிரதமர்  மோடி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது.

இந்த நிலையில், பெங்களுரு  மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி,  “400-க்கும் அதிக இடங்களை கைப்பற்றி அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவோம் என்று கூறுகிறார். சில சமயங்களில் தன்னை தவறாக பேசுகிறார்கள் என்றும், சமயங்களில் மதத்தை பற்றியும் அவர் பேசி வருகிறார்.  உலகின் மதிப்புமிக்க நகரங்களில் வசிக்கும் உங்களுக்கு, இது உண்மையில் தேவை தானா? என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், “காங்கிரஸ் உங்களது தாலி மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைப்பதாக  கூறுகிறார்,. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக நாடு சுதந்திரமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது. யாரேனும் உங்களது தாலியையோ, தங்கத்தையோ திருடியுள்ளார்களா? போரின் போது, இந்திரா காந்தி நாட்டிற்காக தங்கத்தை தானமாக கொடுத்துள்ளார். எனது தாய் நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்துள்ளார் என்றவர்,  60 ஆண்டுகளில் காங்கிரஸ் யாருடைய தாலியையும் பறிக்கவில்லை என்று கூறியவர்,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெண்கள் தங்களது தாலியை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்? என கேள்வி எழுப்பியவர்,  வேளான் சட்டத்தால் 600 விவசாயிகளை கொன்று அவர்களின் மனைவிகளின் தாலியை அறுத்தவர் மோடி, பெண்களின் வலியையும், போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற முட்டாள்தனமான கூற்றை சிலர் வெளியிடுகின்றனர். தாலியின் மதிப்பு சிலருக்கு புரியவில்லை, தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி எப்படி புரிந்துகொள்வார் என காட்டமாக விமர்சித்தார்.