ஜலவடா:
ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர், தேர்தல் நேரத்தில் மோடி அறிவித்தபடி கறுப்பு பணத்தை மீட்டு எனது பங்கான ரூ.15 லட்சத்தை எப்போது தருவீர்கள் என்று கேட்டுள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைத் தமது அரசு மீட்டு அதைப் பிரித்து இந்திய ஏழை மக்களுக்கு தலா 15 லட்சம் வீதம் தரப்போவதாக வாக்குறுதி அளித்திருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்
“எனது பங்கான 15 லட்சத்தை தங்களிடமிருந்து எப்போது பெற்றுக்கொள்ளலாம்?” என்று விபரம் கேட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்தைச் ஏர்ந்த கன்னையாலால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். அவரது விண்ணப்பத்துக்கு பதில் அளிக்கும்படி தேசிய தகவல் ஆணையம் பிரதம் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கன்னையாலால் தனது மனுவில் “மாண்புமிகு பிரதமர் அவர்கள், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அது 90% பெருகியிருக்கிறது. தாங்கள் சொன்னபடி ஊழலை முற்றிலும் ஒழிக்க வகைசெய்யும் சட்டம் எப்போது இயற்றப்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சியின்போது மூத்த குடிமக்களுக்காக கொண்டுவரப்பட்ட 40% பயணச்சலுகையை தாங்கள் அரசு ரத்து செய்யப்போவதாக தகவல் வந்திருக்கிறதே அது உண்மையா? என்றும் விண்ணப்பதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி பிரதமர் அலுவலகம் மெளனம் சாதித்தாலும், சட்டப்படி ஆர்.டி.ஐ விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால். பிரதம அலுவலகம் கன்னையாலாலுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறது.