சென்னை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக இருந்த சுரேஷ் ரெய்னா, திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், துணைக் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
அந்த அணியின் ரசிகர்கள் பலர் இந்தக் கேள்வியை எழுப்பினர். இதற்கு, அந்த அணி நிர்வாகம் புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டின் மூலம் பதிலளித்துள்ளது.
துணைக் கேப்டன் என்பதை ஆங்கிலத்தில் Vice-captain என்போம். எனவே, அதே வார்த்தை உச்சரிப்பில், தோனியை ‘wise’ கேப்டன் என்று குறிப்பிட்டு, ‘vice’ கேப்டன் யார்? என்ற கேள்விக்கு ‘wise’ கேப்டன்(தோனி) இருக்கையில் நமக்கேன் பயம்? என்று பதிலளித்துள்ளது அந்த அணி நிர்வாகம்.
ரெய்னாவின் இடத்தை, இந்த ஐபிஎல் தொடரில், வலது கை பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.