சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும், அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்,  தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து, அதற்கு15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என  அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து. இதனால் தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மேலும்,   3ஆம் தேதி தொடங்கவிருந்த  12 ஆம் வகுப்பு பொது தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொது தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் , மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மற்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம்   பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும் 15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்றுதெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன் தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

[youtube-feed feed=1]