வாஷிங்டன்

ந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் அலை உச்சத்தை எட்டலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்துள்ளார்

 

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது.    இதன் தாக்கம் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.  இதுவரை இந்தியாவில் இதுவரை 3,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கடந்த 24 மணி நேரத்தில் 1.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதாரத்துறை இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே, “உலகெங்கும் தற்போது ஒமிக்ரான் அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.  ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த வருடம் ஏப்ரல் மாதம் டெல்டா அலை உச்சம் அடைந்ததை போல் விரைவில் ஒமிக்ரான் அலையும் உச்சத்தை அடையும்.  ஆனால் டெல்டாவைப் போல் ஒமிக்ரான் மோசமானது இல்லை.

இந்த பாதிப்பு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  இதற்கான தரவுகளை ஆய்வு செய்யும் போது அடுத்த மாதம் இது உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது.  அப்போது தினசரி பாதிப்பு சுமார் 5 லட்சத்தை எட்டலாம்.   ஆனால் இது தென் ஆப்ரிக்காவுடன் ஒப்பிடுகையில் குறைவாகத் தோன்றலாம்.   ஆயினும் தடுப்பூசி மூலம் இந்த தொற்றின் கடுமையைக் குறைக்க முடியும்.

இந்த தொற்றில் சுமார் 85.2% பேருக்கு அறிகுறிகள் இருக்க வாய்ப்பிருக்காது.  எனவே இந்த தொற்று உள்ளவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை.  இதன் மூலம் மருத்துவமனைக் கூட்டம் குறையலாம்.  அதே வேளையில் இந்த தொற்றின் மூலம் மரண எண்ணிக்கை அதிகரிக்காது என்பது சற்றே ஆறுதலான விஷயம்.” எனத் தெரிவித்துள்ளார்.