சென்னை,
தனது பிறந்தநாளையொட்டி தி.நகர் ஓட்டலில் நடைபெற்ற நற்பணி மன்ற விழாவில், 3 மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி பேசிய கமல், அரசியல் கட்சி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து பேசினார்.
கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவேன் அன்று அறிவித்துள்ள கமல், கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகள் குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், இன்றைய அறிமுக விழாவில் பேசிய கமல், அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதாக கூறினார்.
ஒரு சினிமா தயாரிக்கவே 6 மாத காலம் முன்னேற்பாடுகள் செய்யவேண்டிய சூழல் உள்ள நிலையில், ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது மிகப்பெரிய பணி என அதற்கு முன்னேற்பாடுகள் அவசியம். அதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது என்று பேசினார்.
மேலும், கட்சியை தனியாக அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்றும், சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.
கட்சிக்கு அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய கமல், மக்களின் வெற்றிக்காக இதை செய்ய வேண்டியுள்ளது என்றும், எனக்கு பின்னும் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்பதால் அறிஞர்களுடன் ஆய்வு செய்து வருகிறேன் என்று கூறினார்.
கர்ப்பமாக இருப்பேன் என்று சொன்னதும் பிள்ளைக்கு பெயர் என்ன என்று கேட்காதீர்கள். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்துவிட்டு பெயர் சூட்டலாம் என்று கூறிய கமல், நாம் என்ன செய்தாலும் அனைவரிடம் இருந்தும் விமர்சனம் வரவேண்டும்.
இவ்வாறு கமல் கூறினார்.