தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அவரது மறைவையடுத்து காலியாக உள்ளது.
முன்னாள் முதல்வர் வென்ற தொகுதி என்பதால் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா இந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பாலும் ஆர்.கே. நகர் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உ.பி. உட்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும்போது, ஆர்.கே. நகர் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
இந்த நிலையில், உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணைய தலைமைச் செயலாளர் நஜீம் சைதி இன்று அறிவித்தார்.
இன்றைய 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் ஆர்.கே.நகருக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் சைதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.