மும்பை: இந்திய ஓபன் பேட்மின்டன் போட்டி இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படலாம் என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஓபன் பேட்மின்டன் தொடர், மார்ச் மாதம் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இத்தொடர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று தொடராகும்.
இந்திய பாட்மின்டன் சங்க செயலாளர் கூறியதாவது, “உலக பேட்மின்டன் கூட்டமைப்பு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில், இத்தொடரை செப்டம்பர் மாதம் நடத்த முடியுமா? என்று கேட்கப்பட்டிருந்தது அதற்கு பதிலாக, டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்த முயற்சிப்போம் என்று பதிலளித்திருந்தோம்.
ஏனெனில், இந்தியாவில் இத்தொடரை நடத்துவதற்கு முன்பாக, பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.