கோவை: தமிழகத்தில் தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும்,  மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள், 5சவரன் வரை நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி வழங்கி யுள்ளார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர், இன்று பொள்ளாச்சியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை பெற்றுள்ள நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். அதன்படி,

கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி 

5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.