சென்னை
இன்று சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட போதும் செங்கோட்டையன் வெளியேறவில்லை.

இன்று டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றபோது அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சபாநாயகர் மு.அப்பாவு தொடர்ந்து பேச அனுமதி மறுத்துவிட்டார்.
இதையொட்டி அவருக்கு பேச அனுமதி அளிக்கக்கோரி, அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே, அதிமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், அதிமுக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார்.. மேலும் அவர், கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.
அப்போது சட்டையில் அணிந்திருந்த பேட்ஜை அகற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால், பேட்ஜை கழற்றி வைத்துவிட்டு செங்கோட்டையன் பேசினார். முன்னதாக அனைவரும் பதாகையை ஏந்தியபோது, தன்னிடம் கொடுக்கப்பட்ட பதாகையை வாங்கவும் செங்கோட்டையன் மறுத்ததாக கூறப்படுகிறது.
சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டும் வெளியேராத செங்கோட்டையன்

[youtube-feed feed=1]