வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸப் பயன்படுத்தம் நிலையில் இவர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்கும்போது வழங்குவது என்பது சாத்தியமில்லாதது.
மேலும் இந்த விவகாரத்தில் அரசு அழுத்தம் தருமானால் வாட்ஸப் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.