கொரொனா பெருந்தொற்றுக்காலத்தில் இணைய வழி உரையாடல்கள், இணைய வழி அழைப்புகளின் வழியே பலரும் தொடர்பு கொண்டு வரும் நிலையில் சூம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது
இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு சேவைகளை வழங்கி தங்கள் வாடிக்கையாளர்களை கவர போட்டிக்போட்டிக்கொண்டு சலுகைகளை அள்ளி வழங்கிவருகின்றன.
இந்தப்போட்டியில் கூகிள் நிறுவனமும் தற்போது களமிறங்கியுள்ளது.
கூகிள் நிறுவனமானது கூகிள் மீ்ட்டிங் வழியே பயனாளர்கள் காணொலி வழியே உரையாடலாம் என்று அறிவித்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
ஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் உடன் அழைப்பாளருடன் 7 பேர் உரையாடலாம்
கடந்த ஒரு மாதத்தில் 15 பில்லியன் நிமிடங்கள் வாட்ஸ்அப் கால் வழியே பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இப்போது இந்த செயலி எல்லாருக்கும் கொடுக்கப்படவில்லை முதல்கட்டமாக தனது பீட்டா பயனாளர்களுக்கு இதை அறிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் படிப்படியாக தங்களது வாடிக்கையாளருக்கு வழங்கும் என தெரிகிறது
புதிய வாட்ஸ்அப் செயலியில் ’’Room’’ என்றப்பெயரில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கும்
வாட்ஸ் அப் 8 பேருடன் உரையாடலாம் என்று அறிவிக்கும் அதே வேலையில் பேஸ்புக் Messenger வழியே 50 பேருடன் உரையாடலாம் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
செல்வமுரளி