நெட்டிசன்:

Arun Nedunchezhiyan  அவர்களது பதிவு சிரியா இப்ப இரண்டா பிரிஞ்சு கெடக்கு. பசாத் அல் அசாத் அதிபரா இருக்கார் இது ஒரு டீம். இந்த டீம ரஷ்யா,ஈரான் ஆதரிக்குது. இன்னொரு டீம் அசாத்துக்கு எதிரா கிளர்சி செய்யுது. இந்த டீம அமெரிக்க-துருக்கி ஆதரிக்குது

இந்த இரண்டு டீமிக்கும் இடையிலதா இப்ப போர் கொடூரமா நடக்கு. இது கிட்டத்தட்ட துருக்கிக்கும் ஈரானுக்கும் ரஷ்யாக்கும் அமெரிக்காக்கும் நடக்கற போர் மாதிரி ஆய்டுச்சு.

இதுல சிக்கியிருக்கும் பொதுமக்க கஷ்டங்க கொஞ்ச நஞ்சமல்ல சொல்லமுடியாத அளவுக்கு இருக்கு. சிரிய மக்க கொரங்கு கையில சிக்குன பூமால மாதிரி ஆகிட்டாங்க பாவம்

உள்நாட்டுப்போர் தொடங்கி சிரியாவுல ஆறு வருசம் ஆச்சு. இதுவரைக்கும் ஐந்து லட்சம்பேர் பலியாகியிருக்காங்க. ஐம்பது லட்சம் மக்க நாட்டவிட்டு வெளியேறி வேற நாடுகள்ல அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்காங்கன்னு ஐ நாவே சொல்லுது.

அவுங்க அந்த நாட்டு பார்டர்ல தற்காலிகமா குடிசைபோட்டு தங்கியிருக்காங்க. இருபதாயிரம் மக்க அசாத்தின் சிறை சித்ரவதை முகாம்களில சிக்கி பலியாகியிருக்காங்க. சிரியாவின் ஒட்டுமொத்த குழந்தைகளும் கல்வி நிலையத்தில இருந்து வெளியேற்றப்பட்டிருக்காங்க

தற்காலிக கல்வி நிறுவனங்களில் முறையான பயிற்சியுடைய ஆசிரியர்க கல்வி போதிக்கறதில்ல. நாட்டில நான்கில மூன்று பங்கு மக்க வறுமையின் பிடியில் சிக்கியிருக்காங்க.

வெறும் 20% அளவிற்கே மின்சார கட்டமைப்பும் செயல்படுது. அமெரிக்காவால தொடங்குன இந்த நிழல் யுத்தத்த ,சிரியாவின் ஆசாத் படையோடு சேர்ந்து கடந்த சில மாசங்களுக்கு முன்பாக
ரஷ்யா முடிச்சு வெச்சது.

சிரியாவில் ஆசாத்தை அகற்றி பொம்மை அரச அமச்சு சிரியாவோட எண்ணெய சூறையாடுற அமெரிக்காவோட திட்டம் பலிக்கல. ஈராக்கில் வெற்றியடைந்த அமெரிக்க திட்டம் சிரியாவில் பலிக்கல

ஆசாத்தின் ராணுவம் சிரியாவின் பெரும்பான்மை பகுதிகள தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள மறுபடியும் கொண்டு வந்துருச்சு. இந்த சூழலில்தா ஆசாத்தின் ராணுவம் வேதியில் ஆயுதத்தை பயன்படுத்தியதாகவும்,அப்பாவி குழந்தைகள கொன்னதாகவும் வீடியோ காட்சிகள வைரலாக பரப்புனாங்க.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள பயன்படுத்தியதாக அமெரிக்க பிரதிநிதி ஐநாவின் அறிக்கை வாசிக்க,அடுத்த சில தினங்களின் திடுமென 60 ஏவுகணைகளை அமெரிக்கா சிரியாவின் மீது ஏவுச்சு.

சிரியாவின் பாகப்பிரிவினையில இன்னும் நான் இருக்கேன் ,எனக்கும் சிரியாவின் மறுக்கட்டமைப்பில்.எனக்கும் பங்கிருக்குன்னு இந்த தாக்குதல் மூலமா அமெரிக்க சொல்ல ஆசப்படுது.

அமெரிக்க தாக்குதலுக்கு பனிரெண்டு குழந்தைகளை பலியானதாக செய்திகள் வருது. ரஷ்யாவும்,சீனாவும்,ஈரானும் இந்த தாக்குதலை கண்டிச்சிருக்கு.

சிரியாவின் ஆசாத் அமெரிக்க தாக்குதலை கண்டித்துள்ளார். சிரியாவின் எதிர்க்கட்சிகள் அமெரிக்க தாக்குதல ஆதரிச்சு வரவேற்குது.

சிரியாவின் சந்தைய பங்கு போட்டுக்க ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலாக நடக்குற இந்த நிழல் யுத்தத்தில அப்பாவி மக்க ரத்தம் சிந்திட்டிருக்காங்க.

முதல் உலப்போர்,இரண்டாம் உலகப் போர்,ஈராக்,லிபியா என இந்த போர்க ஓயாம சனங்கள நரகத்துல தள்ளுது. இவுங்க சந்தைக்காகவும். ஆளும் கூட்டத்தின் நலன்களுக்காகவும்.அப்பாவி உழைக்கும் மக்கள பலியாக்கிகிட்டிருக்காங்க.

ஆளும்வர்கங்களின் ஏகாதிபத்தியங்களின் இந்த நகரமிராண்டித்தனமான போருக்கு எதிரா தொழிலாளர்கள் இளைஞர்கள் அணிதிரண்டு எதிர்க்க வேண்டும்.

சமாதானம்,அனைத்து மக்களுக்கான ஜனநாயக கோரிக்கையில் உழைக்கும் வர்க்கமானது ஆள்கிற காட்டுகிற அரசிற்கெதிராக திரள வேண்டும்.உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் நாடுகளின் எல்லைகள் கடந்து, மதங்கள்,மொழி கடந்து ஆளும் வர்க்கத்தின் பயங்கரவாதத்தை எதிர்த்து உறுதி மிக்க
தாக்குதலை தொடுக்கவேண்டும்.