ராமநாதபுரம்
நஷ்டம் எவ்வளவு ஆனாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்துள்ளார்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட வாகைக்குளம், பொதிக்குளம், கணிக்கூர், கொண்டு நல்லான்பட்டி, வல்லக்குளம், பன்னந்தை, மாரந்தை, கிடாத்திருக்கை, இளஞ் செம்பூர், கீழச்சிறுபோது ஆகிய 10 இடங்களில் அனைவருக்கும் நல வாழ்வு திட்டத்தின் கீழ் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட 10 புதிய துணை சுகாதார நிலையங்களைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.
நிகழ்வுக்கு பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம், “தற்போது தமிழகத்தில் மொத்தம் 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படும். பேருந்து கட்டணம் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் உயர்த்தப்பட மாட்டாது.
கருணை அடிப்படையில் போக்குவரத்துத் துறையில் வாரிசுகளுக்கு வேலை தயா ராகிக் கொண்டிருக்கிறது.நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும். தற்போது அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் 1,800 காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக நடத்துநர், ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.ல்லை