சென்னை: நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பபோவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதையடுத்து, இன்று மாலை பார்த்திபன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பார்த்திபனின் இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக எதையும் வித்தியாசமாக யோசிக்கும் நடிகர் பார்த்திபன், தனது படம் விவகாரம் தொடர்பான அறிவிப்பையே இவ்வாறு வித்தியாசமாக பதிவிட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகறிது.
பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பார்த்திபன் இன்று திடீரென எக்ஸ் சமூகவளைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதாவது பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்,
Friends.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, அப்படி என்ன அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து யூகித்து பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.