
இங்கிலாந்தில் டெஸ்ட் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட விண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதற்கு, அந்த அணியின் கேப்டன் செய்த ஒரு முக்கிய தவறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில், டாஸ் வென்றும்கூட, பேட்டிங் தேர்வுசெய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்தது பெரிய தவறு என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
பொதுவாக, ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, அவர்கள் டெஸ்ட்டில் டாஸ் ஜெயித்துவிட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் பேட்டிங்தான் தேர்வு செய்வார்கள். அவர்களின் இந்த உத்தி, பலசமயங்களில் அவர்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது.
எனவே, இந்த உத்தியை ஹோல்டர் பின்பற்றியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், டெஸ்ட் தொடரை வென்றிருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
Patrikai.com official YouTube Channel